×

புதுச்சேரியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் கலால்வரித்துறை சோதனை..!!

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் கலால்வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய கலால்வரித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து பெண் அதிகாரி ஒருவரை சிபிஐ விசாரணைக்கு அழைத்து சென்றது.

The post புதுச்சேரியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் கலால்வரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Commercial Tax Department Office ,Puducherry ,Department of Business Tax Office ,Indira Gandhi Square, Puducherry ,Union Department of Culture ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை